12 Health Benefits of Ragi for Babies

ராகி ஃபுட்ஸ் இப்போது ஹாட் அண்ட் டிரெண்ட். தமிழில் கேழ்வரகு எனக் கேள்விப்பட்டிருப்போம்… கேழ்வரகு எனச் சொன்னால் பலருக்கும் தெரியாது. ராகி உணவுகள் குழந்தைகளுக்கான பெஸ்ட் உணவாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. ராகியால் தயாரித்த ஸ்நாக்ஸ், நூடுல்ஸ் போன்றவை சூப்பர் மார்கெட்டிலும், ஆர்கானிக் ஷாப்பிலும் முதல் வரிசையில் வைக்கும் அளவுக்கு ராகி தற்போது கம்பேக் ஹீரோவாகவே மாறிவிட்டது. இந்த ராகி மாவால் காரமும் ஸ்வீட் உணவு வகைகளையும் செய்ய முடியும் என்பது இதன் ஸ்பெஷல். வெள்ளையான இட்லி, தோசை, கஞ்சி சாப்பிட்டு போரடித்த குழந்தைகளுக்கு ராகி உணவுகள் சிறந்த மாற்று. குழந்தைகளுக்கு பிடித்தமான யம்மி உணவுகளில் ராகியும் ஒன்று. குழந்தைகளுக்கு ஏன் ராகி முக்கியம், ராகியால் செய்யக் கூடிய ரெசிபிகளின் செய்முறையும் பற்றிப் பார்க்கலாம்.

ராகி (Ragi) என்றால் என்ன?

சிறுதானிய குடும்பத்தைச் சேர்ந்தது ராகி. கிழக்கு ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பல தலைமுறைகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் ராகியை பயன்படுத்தி வருகிறோம்.  இந்தியாவின் தெற்கு பகுதிகளில் ராகி மிகப் பிரபலமான உணவு. பெரும்பாலானோர் இப்போது உடல்நலத்துக்காக அதிகம் மெனக்கெடுவதால் ராகியை தங்களது உணவில் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இப்போது ராகி டிரெண்டாகிவிட்டது.

குழந்தைகளுக்கு ஏன் ராகி உணவு கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு நோய் எதிர்பாற்றலைத் தருவதால் ராகியை தற்போது அதிகமாகக் குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர். பல தலைமுறைகளுக்கு முன்பிலிருந்தே குழந்தைகளின் முதல் உணவாக ராகி கொடுக்கப்பட்டு வந்துள்ளதை சித்த மருத்துவர்கள் தற்போது விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் முதல் உணவு

குழந்தையின் முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6வது மாதத்துக்குப் பிறகிலிருந்து தாய்ப்பாலுடன் திட உணவையும் தர வேண்டும். அதில் முதல் இடம் வகிப்பது ராகி உணவுகள்.

உடல் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சிக்கான முக்கியப் பருவம் 0-6 வயது வரை. அதில் 6-வது மாதத்திலிருந்து திட உணவைக் கொடுக்கத் தொடங்கினால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். தசைகள், செல்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

அமினோ அமிலங்கள் அதிகம்

லூசின், பெனைல் அலனைன், மெத்தியோனின், ஐசோலுசின் ஆகிய முக்கிய அமினோ அமிலங்கள் ராகியில் நிறைந்துள்ளன. இந்த முக்கிய அமினோ அமிலங்கள் எல்லாம் சத்துகளாகக் கருதப்படுகிறது. இவை ராகியில் இருப்பது சிறப்பு.

இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ராகியில் அதிகம். மற்ற தானியங்களைவிட ராகியில் அதிகமாகக் காணப்படுகின்ற சத்துகள் இவை. குழந்தைகளின் எலும்பு, பல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

வயிறு நிறைந்த உணர்வு

ஜூஸ், இட்லி போன்ற உணவுகள் சாப்பிட்ட சில மணி நேரத்திலே பசி எடுக்கும். ஆனால், ராகியை குழந்தைக்கு கொடுத்தால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். பசி உணர்வு அதிகம் இருக்காது. நீண்ட நேரம் பசி எடுக்காது.

ரத்தம் உற்பத்திக்கு உதவும்

அதிக அளவில் இரும்பு சத்து உள்ளதால் உடலில் ரத்தம் உற்பத்தியாக உதவும். இரும்புச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

வளர்ச்சி ஹார்மோனை ராகி மேம்படுத்தும்

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் சிறப்பாகச் செயல்பட ராகி பெரிதும் உதவுகிறது.

ஹெல்தி மெட்டபாலிசம்

உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால்தான் உடலின் வளர்ச்சி, இயக்கம் சீராக நடக்கும். ராகியில் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆகவே வளர்சிதை மாற்றமும் சீராக இருக்கும்.

பெஸ்ட் புரதம்

ராகியில் உள்ள புரதம் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு உதவும். குழந்தைக்கு தேவையான புரதம் எனும் சத்து ராகியில் நிறைந்துள்ளன.

லைட் உணவு

குழந்தைக்கான லைட் மீல் இந்த ராகி. கொழுப்பு குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் லேசான உணவாகவும் அமையும். செரிமான சீராக நடக்கும். ஆதலால் குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்காது.

குழந்தையின் மூட் ஸ்விங்க்ஸை கட்டுப்படுத்தும்

சில குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பார்கள். சிலர் சோர்வாகக் காணப்படுவார்கள். ராகி சாப்பிடுவதால் குழந்தையின் மூட் (மனநிலை) சீராக இருக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு இருக்காது

பொதுவாகக் குழந்தைகள் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிபடுவர். ஆனால், ராகி சாப்பிடும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொல்லைகள் இருக்காது.

ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

அரிசியைவிட ராகியில் புரதச்சத்துகள் மிக அதிகம்.

மற்ற தானியங்களைவிட 5-30 மடங்கு கால்சியம் சத்து ராகியில் அதிகமாக உள்ளது.

ஃபுட் பாஸ்சன், சால்மொனெல்லா கிருமி போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகளின் வீரியத்தை ராகி குறைக்கும். கிருமிகளை வெளியேற்றும்.

ஆன்டிஆக்ஸிடன்ட், பினொலிக் ஆசிட், ஃப்ளேவனாய்ட், டானின் ஆகியவை நிறைந்துள்ளதால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவு. குறிப்பாக ராகி சாப்பிடுவதால் தொண்டை, உணவுக்குழாய் புற்றுநோய் வராது.

ராகி கஞ்சி, இட்லி என எதாவது ஒரு வகையில் ராகியை சாப்பிடும் குழந்தைகளின் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். முதுமையாவது தாமதப்படுத்தப்படும்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும். இதய நோய்கள் வராது.

ராகியின் ஊட்டச்சத்துகள்

  • மாவுச்சத்து – 72.6
  • புரதம் – 7.7
  • நார்ச்சத்து – 3.6
  • கொழுப்பு – 1.3
  • கால்சியம் – 350 mg
  • இரும்பு – 3.9
  • நியாசின் – 1.1

குழந்தைகளுக்கான ராகி ரெசிபி

1. ராகி தோசை

ragi dosa

தேவையானவை:

  • அணில் ராகி மாவு – 1 கப்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

அணில் ராகி மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

உப்பு சேர்த்து கரைத்த மாவை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்.

தவா சூடானதும் மெலிதாக தோசை சுட்டு, சுற்றி எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

இருபுறமும் வெந்தவுடன் தோசையை எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.

தயாரிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

2.ராகி கஞ்சி

தேவையானவை:

  • அணில் ராகி மாவு – ½ கப்
  • பால் அல்லது தண்ணீர் – தேவையான அளவு
  • நாட்டு சர்க்கரை – ஒரு ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் தேவையான தண்ணீர் அல்லது பால் வைத்துக் காய்ச்சவும்.

சிறிதளவு தண்ணீர் விட்டுக் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

கரைத்த மாவை அடுப்பில் உள்ள தண்ணீர் அல்லது பாலில் சேர்த்து 5-7 நிமிடங்கள் வேகவிடவும்.

நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி இறக்கிவிட வேண்டும்.

இறக்கியதும் தேங்காய்த் துருவல் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

தயாரிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

3.ராகி மால்ட்

தேவையானவை:

  • அணில் ராகி மாவு – 3 டேபிள்ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • மோர் அல்லது யோகர்ட் – ½ டம்ளர்

செய்முறை:

தேவையான தண்ணீர் சேர்த்து ராகி மாவு போட்டு பேஸ்டாக கலந்துகொள்ளவும்.

தண்ணீரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.

உப்பு, ராகி பேஸ்ட் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக விடவும்.

கஞ்சி ஆறியதும் மோர் அல்லது யோகர்ட் சேர்த்துக் கலக்கவேண்டும்.

தயாரிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

4.ராகி இட்லி

ragi idly

தேவையானவை:

  • இட்லி அரிசி – 1 கப்
  • அணில் ராகி மாவு – 2 கப்
  • உளுந்து – ¾ கப்
  • வெந்தயம் – ½ டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். அரிசியைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

முதலில் உளுந்து, வெந்தயத்தை அரைத்துத் தனியாகப் பாத்திரத்தில் போட்டுவைக்கவும்.

அரிசியைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த உளுந்து மாவு, அணில் ராகி மாவு, அரிசி மாவு ஆகியவை கலந்து மாவை 7-8 மணி நேரம் புளிக்க விடவும்.

இட்லி தட்டில் இந்த ராகி இட்லி மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.

தயாரிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

5.ராகி அல்வா

தேவையானவை:

  • அணில் ராகி மாவு – 1 ½ கப்
  • நாட்டு சர்க்கரை தூள் – தேவையான அளவு
  • நெய் – ½ கப்
  • முந்திரி, திராட்சை, பிஸ்தா – ¼ கப்
  • ஏலத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • தண்ணீர் – 3 கப்

செய்முறை:

நெய் கொஞ்சம் சேர்த்து நட்ஸை வறுத்துக்கொள்ளவும்.

அணில் ராகி மாவை தண்ணீராகக் கலந்து பேஸ்டாக கலக்கவும்.

மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காத பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ராகி மாவு கலவையைப் போட்டு தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, நாட்டு சர்க்கரை தூள், ஏலப்பொடி கலக்கவும்.

மேலும் நெய் விட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும்.

குறைவான தீயில் 3-4 நிமிடங்களுக்கு அப்படியேவிடவும். அவ்வப்போது கிளறவும்.

பேஸ்ட் கலவையிலிருந்து அல்வா பதம் வந்ததும், வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா சேர்க்கவும்.

நெய் தனியே அல்வா தனியே எனப் பிரிந்து வரும் வேளையில் அடுப்பை அணைத்து வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடலாம்.

தயாரிக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

6.ராகி சேமியா கேரட் கோஸ் அடை

ragi semia carrot cabbage adai

தேவையானவை:

  • அணில் ராகி சேமியா – 100 கிராம்
  • நறுக்கிய கேரட், கோஸ் – ½ கப்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
  • பெருங்காயம் – சிறிதளவு

அரைக்க:

  • பச்சரிசி – 100 கிராம்
  • துவரப்பருப்பு, கடலப்பருப்பு – தலா 50 கிராம்
  • சிவப்பு மிளகாய் – 8

செய்முறை:

ராகி சேமியாவை சுடுநீரில் போட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து சுடுநீரில் 3 நிமிடங்கள் வேகவைத்து, வடித்து, உதிர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரை மணி நேரம் ஊறவிட்டு கரகரவென அரைத்து, அணில் ராகி சேமியா, நறுக்கிய காய்கறிகள் பெருங்காயம் சேர்த்து கனமான அடைகளாக எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

தயாரிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

சிறுதானிய உணவுகள் நம் நாட்டு உணவுகள். அவை உடலுக்கு நன்மைகளையே செய்யும். இந்தச் சிறுதானிய வகையைச் சேர்ந்த ராகி குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை நன்மைப் பயக்கும். உங்கள் குழந்தைக்கும் சரி நீங்களும் சரி, வாரத்தில் 4-5 வேளை ராகியை உணவாகக் கொண்டால் நோய்கள் அருகில் நெருங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *