கோதுமை அரைக்கப்பட்டு மாவாக வருவதை, கோதுமை மாவு / ஆட்டா என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையைப் பராமரிக்க கோதுமை உதவுவதாக அமிரிக்கன் ஜர்னல் சொல்கிறது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவு என்பதால், செரிமானம் சீராகும். மலச்சிக்கல் நீங்கும். உடலின் மெட்டபாலிசம் சீராகி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் காக்கும். மெக்னிசியம் அதிகம் இருப்பதால், இன்சுலின், குளுக்கோஸ் சுரப்புகள் சீராக இருக்கும்.
தொடர்ந்து கோதுமை உணவுகளைச் சாப்பிடுவோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகப் பராமரிக்கப்படும். பித்தப்பையில் சுரக்கும் பைல் ஆசிட் குறைந்த அளவில் சுரப்பதால், பித்தப்பை கற்கள் உருவாகாது. புற்றுநோய் காரணிகளை எதிர்க்கும்தன்மை கொண்டது. குறிப்பாக உணவுக்குழாய், மார்பக புற்றுநோய், மெனோபாஸ் அடையும் முன் வரும் தொந்தரவுகள் ஆகியவை வராமல் தடுக்கப்படும். இதில் குளுட்டன் அதிகமாக இருக்கும். அதாவது கோதுமை மாவை பிசைந்து இழுத்தால், நாம் இழுக்கும் அளவுக்கு வளைவுத்தன்மை கொண்டுள்ளதால் வேண்டிய வடிவங்களில் உணவு வகைகளைச் செய்யலாம். கோதுமையின் பலன்களைப் பெற கோதுமை மாவால் தயாரிக்கப்படும் ரெசிப்பிக்கள் எப்படி செய்வது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
கோதுமை பரோட்டா
தேவையானவை
அணில் சக்கி ஃப்ரெஷ் ஆட்டா – 2 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய், நெய் – தேவைக்கு ஏற்ப
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
செய்முறை
அகலமான பாத்திரத்தில் மாவு, உப்பு, நெய், எண்ணெய் சேர்த்து, தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து பிசையவும். சப்பாத்தி மாவு பிசைவது போலவே பிசைய வேண்டும். பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். இதனால் மாவு மென்மையாகும். பின்னர் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெய் தடவி வைக்க வேண்டும். சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல தேய்க்கவும். ஆனால், சற்று மெலிதாக பெரிய அளவில் திரட்டவும். திரட்டிய மாவை முன்னும் பின்னுமாக மாறி மாறி மடிக்கவும். அதாவது பார்க்க, பிழிந்த துணிபோல இருக்கவேண்டும். அதனை அப்படியே வட்டமாக சுற்றி அதன் மேலே எண்ணெய் தடவி வைக்கவும். இதுபோல எல்லா உருண்டைகளையும் திரட்டி, மடித்து, சுற்றி வைக்கவும். இப்போது இதை திடமான பதத்தில் திரட்ட வேண்டும். திரட்டியதை தவாவில் இருபக்கமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். சுட்ட பரோட்டைவை பலகையில் வைத்து இரு கைகளால் உள்பக்கமாக அழுத்தி லேசாக இழுக்கவும். சுவையான, ஆரோக்கியமான பரோட்டா தயார்.
கோதுமை காய்கறி கொழுக்கட்டை
தேவையானவை
அணில் ஆட்டா – 1 கப்
அணில் அரிசி மாவு / அணில் கொழுக்கட்டை மாவு – 1 குழி கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
பொடியாக துருவிய கேரட், முட்டைக்கோஸ், உருளை சேர்த்து – 1 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 6
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
வாணலில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுக்கவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு சேர்க்கவும். சிறிது சிறிதாக கொதிக்கும் நீரை ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு நல்லெண்ணெய் சேர்த்து பிசையவும்.. வாணலில் எண்ணெய்விட்டு வெங்காயம், பிறகு காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிசைந்துள்ள மாவை எலுமிச்சம் அளவுக்கு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டு, அதில் தேவையான அளவு வதக்கிய காய்கறிகளை வைத்து, கொழுக்கட்டையை மூடவும். இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.