Anil Rebranding Event
அணில் நிறுவனத்தின் புதிய வெளியீடு…
புதிய சிறுதானிய சேமியா வகைகள்
திண்டுக்கல்லில் உள்ள பாரம்பரியம் மிக்க அணில் நிறுவனம், மக்களின் நலனுக்காக புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அணில் நிறுவனத்தின் புதிய வெளியீடு இந்தப் புதுரக சிறுதானிய சேமியா வகைகள். அசத்தலான சுவையில் அழகு பேக்கில் அறிமுகமாகி இருக்கிறது.அணில் உணவுகள் இப்போது புதுச்சுவையுடன் பாரம்பரியம் மாறாமல் வந்திருக்கின்றன. இந்தப் புதுரக சேமியா வகைகளில் தரம், பலம், மணம், சுவை போன்ற அனைத்தும் உள்ளன. தரமான, ஆரோக்கியமான உணவை உங்களுக்குப் பரிமாறுவதில் அணில் நிறுவனம் பெருமையடைகிறது.
அணில் கோதுமை சேமியா
கோதுமையால் தயாரித்த அணில் கோதுமை சேமியாவில் தாதுக்கள், கால்சியம், சோடியம், பொட்டாசியம், மெக்னீஷியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. எளிமையான முறையில், வெகு சீக்கிரம் சமைக்கக்கூடிய, சுவையான, ஆரோக்கியமான உணவு இது.
அணில் வரகு சேமியா
எளிமையாக, குறுகிய நேரத்தில் சமைக்க கூடிய அளவுக்கு அணில் வரகு சேமியா தயாரிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வரகு சேமியாவை தங்களது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வோரின் ஆரோக்கியம் மேம்படும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றுக்குத் தீர்வாகும்.
அணில் தினை சேமியா
அரிசிக்கு சரியான மாற்று இந்த அணில் தினை சேமியா. அரிசியை ஒப்பிடும்போது தினையில் கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவு. இதனால் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை சேரும் பிரச்னை இருக்காது. மாவுச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை நிறைந்த அணில் தினை சேமியா உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
அணில் கம்பு சேமியா
உடனடி எனர்ஜியை தரக்கூடியது அணில் கம்பு சேமியா. புரதம், கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஆகியவை நிறைந்துள்ளன. தொடர்ந்து அணில் கம்பு சேமியாவை உண்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல்பருமனாக இருப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த அணில் கம்பு சேமியா.
அணில் சோளம் சேமியா
அணில் சோளம் சேமியாவில் ஆன்டிஆக்ஸிடன்ட், பைடோகெமிக்கல்ஸ், நார்ச்சத்து, புரதம், தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. கெட்ட கொழுப்பை குறைக்கும். சோளத்தைச் சமைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்களுக்கு, அணில் சோளம் சேமியா சிறந்த சாய்ஸ்.
அணில் உணவுகளோடு உங்களது ஆரோக்கியம் மேம்படட்டும்…