உலகம் முழுவதும் பயன்படுத்த கூடிய தானியம், கோதுமை (wheat). ஆசிய நாடுகளில் வெகு பிரபலம். பேக்கிங் உணவுகளுக்கு கோதுமை பயன்படுகிறது. பிரெட், பாஸ்தா, கேக், மஃபின்ஸ் ஆகியவை செய்ய கோதுமையை பயன்படுத்துகிறார்கள். உடலுக்கு நன்மை செய்யும் சத்துகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட், விட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை உள்ளன. சிலருக்கு கோதுமையில் உள்ள குளுட்டன் எனும் புரதமும் ஒத்துகொள்ளாது. அந்த சத்தும் கோதுமையில் நிரம்பியுள்ளன. யாருக்கு கோதுமை ஒத்துகொள்ளுமோ அவர்கள் சாப்பிட நன்மைகளைப் பெறலாம். மற்ற எல்லா தானியங்களைப் போல கோதுமையும் மாவுச்சத்து நிறைந்தது. முழுமையான கோதுமையில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். ரீபைண்ட் கோதுமையில் நார்ச்சத்து நீக்கப்பட்டிருக்கும். கோதுமையில் உள்ள நார்ச்சத்துகள் வயிற்றில் சென்று சிறுகுடல், பெருங்குடலில் நல்ல பாக்டீயாக்களை உருவாக்கி செரிமானத்துக்கு உதவும். புரத சத்தும் கோதுமையில் நிறைந்துள்ளது. குளுட்டன் எனும் புரதம் இருப்பதால் கோதுமை மாவு ஒட்டும்