குழந்தைகளுக்கு முதல் உணவாகத் தரும் உணவு வகைகளில் ராகியும் (Ragi) ஒன்று. ஆரோக்கியத்துக்கான அடையாளம் ராகி (கேழ்வரகு) எனச் சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ராகி சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ராகியைச் சாப்பிடுகின்றனர். உலகளவில் செய்யும் விவசாயத்தில் ராகி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ராகி உற்பத்தியை அதிகம் செய்யும் மாநிலம், கர்நாடகம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை நிறைந்துள்ளதால் ஊட்டச்சத்துகளின் வீடாக ராகி திகழ்கிறது. அரிசி, கோதுமையை ஒப்பிடும்போது ராகியில் புரதம் மிக அதிகம். தியாமின், கால்சியம், இரும்பு சத்து, ரைபொஃப்ளேவின், அமினோ அமிலங்கள், மெத்தியோனின் ஆகியவை இருப்பதால் நான்கு மாத நிறைந்த குழந்தைகளுக்குகூட கொடுக்கலாம். கிளைசமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு, குளுட்டன் சிறிதும் இல்லை