
பெயர் மட்டும்தான் சிறுதானியங்கள், பலன்கள் தருவதில் இவை பெருந்தானியங்கள். இதை நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். நடுவில் நாம் அரிசி உணவுகளைச் சாப்பிட பழகிவிட்டோம். அதனால், அரிசி கெட்டது என்பது கிடையாது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைச் சாப்பிடுவதால் பலன்கள் கிடைக்க போவதில்லை. பாலிஷ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி நல்லது. எல்லா நாளும் அரிசியை மட்டுமே சாப்பிடாமல், தினம் ஒரு சிறுதானியம் எனச் சாப்பிட்டு வந்தால் டாக்டரின் கிளினிக் பக்கம் போக வேண்டிய அவசியம் இருக்காது. நோய்களை விரட்டும் தானியங்கள் நமக்கு கிடைத்த வரம். மண்ணுக்கு உரம்போல உடலுக்கு உரமூட்டும் உணவுகள்தான் தானியங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களைச் சாப்பிட பழகுங்கள். ஆரோக்கியமான வாழக்கையை வாழ்ந்திடுங்கள். வரகு (Kodo Millet) மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது, தானியங்கள். குறிப்பாக வரகு.