‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனச் சொல்வார்கள். வினையை அறுக்கிறோமோ இல்லையோ தினையைச் சாப்பிடுபவன் திடமாவான். தினையை சோறாக்கி மாவாக்கி உண்பவன் ஆரோக்கியமானவன் என்பதே உண்மை. இந்தியா, ஆஃப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் முக்கிய உணவாகத் தினை இருக்கிறது. ஹெல்த்தி டயட் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படுவது தினை. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த நைவைத்தியம். தினை மாவும் பொடித்த வெல்லமும் கலந்து பிரசாதமாக தருவார்கள். அவ்வளவு சிறப்பு பெற்றது தினை. அதை நாமும் சாப்பிட்டால் பலன்களை எளிதில் பெறலாம். இதயத்துக்கு நல்லது இதில் உள்ள வைட்டமின் பி1 தசைக்கும் நரம்புக்கும் நன்மையைச் செய்யும். கார்டியாக்கின் செயல்பாட்டை சீராக்கும். சீரற்ற செயல்பாடுகளை சரிப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு தினை நல்லது. தினை சோறு, தினை தோசை, தினை சேமியா எனத் தினையை எதாவது