பெயரில் மட்டும்தான் சர்க்கரை. ஆனால், இந்த நோய் வந்தால் சர்க்கரை பக்கமே தலைவைத்துப் படுக்க கூடாது என்பார்கள். ‘சர்க்கரை நோய் வந்தால் அவ்வளவுதான்… இனி மாத்திரை, இன்சுலினை நம்பியே இருக்க வேண்டும்’ என்ற தவறான கருத்துகளும் பரவியுள்ளன. நோயின் தீவிரம், நோயாளியின் உடல்நலம், மனநலம் மற்றும் அவரது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் வைத்துதான் இதைத் தீர்மானிக்க முடியும். கேட்டவர், தெரிந்தவர், அனுபவித்தவர் எனப் பேச்சால் வரும் கருத்துகளை நம்பி யாரும் அச்சப்படவேண்டியது இல்லை. பெரும்பாலானோர் நோயை உணவிலே குணப்படுத்த முடியுமா என்று கேட்பார்கள். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி பிரச்னை இல்லாமல் வாழ்ந்திட முடியும். துரித உணவுகள், உடல்நல பிரச்னைகளின் ஆரம்பம் எனச் சொல்லலாம். நல்ல உணவே நோய்களுக்கான மருந்து. நன்மை தரும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க